Thursday, 6 November 2008

** புதிய அமெரிக்க அதிபர் தெரிவு இலங்கை வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லை - ரொபேட் ஓ பிளாக்

அமெரிக்காவில் பராக் ஒபாமா 44வது அமெரிக் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்படாது என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தெரிவித்துள்ளார். பராக் ஒபாமா அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறீலங்கா தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எதுவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சிறீலங்காவில் போர் முன்னெடுப்புகள் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும், பொருளாதார ரீதியில் மேம்படுவதற்கும் அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
pathivu.com
******

No comments: