வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் தீர்மானத்திற்கு அமைவாகவே உணவு, மருந்து அடங்கிய பொருட்களை வன்னிக்கு எடுத்துச்செல்ல முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு படைத்தரப்பு உத்தரவிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அதேவேளை, நிவாரண பொருட்களை வன்னிக்கு கொண்டு செல்வதற்கான வீதி ஒழுங்குகளிலும் மாற்றம் செய்யப்படும் என்று படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவாரண பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் வன்னிக்கு கொண்டு செல்லவுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
__________
Puthinam.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment