இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.பொறுப்புள்ள அமைச்சர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பதில் சொல்லும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அமைச்சர் சிவராஜ் பட்டீல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மும்பாய் தாக்குதலின் எதிரொலியாக தனது பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய எம்.கே நாராயணன் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளனர்.
இந்த இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளனர்.
அதேவேளை, இந்திய பாதுகாப்பு மற்றும் உல்லாச பயண துறைகளுடன் தொடர்புபட்ட வேறு பல உயரதிகாரிகளும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
___________
Puthinam.com








No comments:
Post a Comment