வடபோர் முனையில சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது 18 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 29 படையினர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணியளவில் முகமாலை, கிளாலி, கண்டல் ஆகிய பகுதிகளில் ஊடாக விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டனர்.இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய 6 மணி நேர முறியடிப்புத் தாக்குதலில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 29 படையினர் காயமடைந்துள்ளனர்.
முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படையினர் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர். படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு ஆதரவாக சிறீலங்கா விமானப் படையினரின் கிபிர் யுத்த வானூர்திகள் பளை, கிளாலி, முகமாலை ஆகிய பகுதிகளில் வான் தாக்குதலை நடத்தியுள்ளன.
_________
Pathivu.com








No comments:
Post a Comment