Saturday, 15 November 2008

** அம்பறை கஞ்சிகுடிச்சாற்றில் புலிகளின் தாக்குதலில் 3 அதிரடிப் படையினர் பலி! இருவர் காயம்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்கா அதிரடிப் படையினர் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி இரண்டு சிறீலங்கா அதிரடிப் படையினர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை வனப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
pathivu.com
*****

No comments: