Saturday, 8 November 2008

** அம்பாறையில் பதுங்கித் தாக்குதல்: படையினர் நால்வர் பலி! மேலும் மூவர் காயம்

அம்பாறை தம்பிட்டியப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கித் தாக்குதல் நடவடிக்கையில் சிறீலங்கா அதிரடிப் படையினர் மூவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் தம்பிட்டிப் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பதுங்கித் தாக்குதல் (Ambush - அம்புஸ்) நடத்தப்பட்டுள்ளது.

இதில் அதிரப் படையினரைச் சேர்ந்த மூவரும், படைச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அதிரடிப் படையைச் சேர்ந்த இருவரும் படைச் சிப்பாய் ஒருவருமாக மூன்று படையினர் காயமடைந்துள்ளனர்.தாக்குதலின் போது படையினர் வைத்திருந்து சுடுகலன்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரி56 2 வகைத் துப்பாக்கிகள் - 2
-
ரி56 2 வகைத் துப்பாக்கிகளுக்கான ரவைக் கூடுகள் - 12
-
நடுத்தர ரவைகள் - 180
-
ரவைக்கூட்டுத் தாங்கி - 2
-
தொலைக் தொடர்பு கருவி - 1


ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரிவினர் அறிவித்துள்ளனர்.
pathivu.com
****

No comments: