Saturday, 15 November 2008

** வானூர்தி மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள்: ஜேன்ஸ் பாதுகாப்பு வார ஏடு

தமிழீழ விடுதலைப் புலிகள் வானூர்திகள் மூலம் ஆயுதங்களை தருவிப்பதாக ஜேன்ஸ் பாதுகாப்பு வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வானூர்தி மூலம் தருவித்து வருவது ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பீரங்கி எறிகணைகளே வானூர்தி மூலம் வன்னி பகுதிக்கு எடுத்து வரப்பட்டிருந்தன.

2004 மற்றும் 2007 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வர்த்தக செய்மதிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பாரிய சரக்கு வானூர்திகள் இறங்கி செல்லக்கூடிய இரண்டு வானூர்தி ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் அமைத்து வந்தது கண்டறியப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பாக உறுதிப்படுத்த முடியவில்லை.எனினும், விடுதலைப் புலிகள் பெரும் பொருளாதார வளங்களை செலவிட்டு இந்த ஓடுபாதைகளை அமைத்தது நெருக்கடியான கால கட்டங்களில் விநியோகங்களை பெற்றுக் கொள்வதற்கே என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
******

No comments: