Saturday, 22 November 2008

** முறிகண்டியில் முன்னகர்வு முறியடிப்பு: 6 படையினர் பலி! உடலம் மீட்பு


முறிகண்டிப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 10:45 மணி வரையிலான நேர இடைவெளியில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் படையினரின் உடலம் ஒன்றையும், ரி56 ரக துப்பாக்கி ஒன்றையும், அதற்கான ரவைகளை, ரவைக்கூடுகள் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
_________
Pathivu.com

No comments: