தமிழீழ மாவீரர் நாள் போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும் என மாவீரர் பணிமனை இன்று வெளியிட்டுள்ள மாவீரர்நாள் தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கியமானதாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழ விடிவிற்காகவும், உயாவிற்காகவும் உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து இந்த மண்ணுக்கே உரமாகிவிட்டவர்களினதும், எமது மூச்சுடன் கலந்து கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.
உங்கள் உயிலும் மேலான குழந்தைகளும், எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள், இலட்சியதாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகும். புனிதத்தன்மை வாய்ந்ததுமாகும். காலம் காலமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும். இம்மாவீரர்களின் நினைவுகள் என்றும் எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக இருக்கும்.
மாவீரர்களது இத்தகைய நினைவுகூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டிற்குரியவையாகவும் வளர்ந்து வர வேண்டும். இதனைத் தத்துவார்த்தமாகவும் வளர்த்து வர வேண்டும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________
Sankathi.com








No comments:
Post a Comment