Saturday, 22 November 2008

** மழையினால் சிறிலங்கா படை நடவடிக்கை பாதிப்பு!

வன்னியில் தற்போது பெய்து வரும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வன்னியின் பல முனைகளிலும் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா படையினர் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மேற்கிலும், அதன் தென்மேற்குப் பகுதிகளிலும் படையினர் முன்னகரும் நிலப்பகுதிகள் தற்போது சேறும் சகதியுமாகியுள்ளதாலும், மழை வெள்ளம் பல பகுதிகளில் ஊடறுத்துப்பாய ஆரம்பித்துள்ள நிலையிலும் படையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்குச் சாதகமற்ற இந்நிலப்பரப்புக்களைக் கடந்து முன்னகர்வதற்கான எத்தனங்களை இப்பகுதிகளில் அவர்கள் மேற்கொண்டு வருகின்றபோதும், விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களின் தீவிரத்தால் படையினர் கடும் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி மேற்குப்பகுதிகளான அக்கராயன்குளம், யூனியன்குளம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் மழைவெள்ளத்தால் ஊடறுக்கப்பட்டு பாதைகள் துண்டிக்கப்படும் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
_________
Sankathi.com

No comments: