ஓமந்தைச் சோதனைச் சாவடியை மூடியதன் விளைவாக வன்னி நிலப் பரப்பில் பாரிய மனித அவலத்தை சிறீலங்காப் படையினர் ஏற்படுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதுகுறித்து தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவிக்கையில்:-
கடந்த மூன்று நாட்களாக ஓமந்தைச் சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளதாக வன்னிக்கான உணவு மற்றும் மருந்துகள் கொண்டுவருவது தடைப்பட்டுள்ளது. இதனால் வன்னியில் உள்ள அப்பாவி மக்கள் பெரும் இடர்பாட்டுக்குள் சிக்குண்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக சிறீலங்காப் படையினர் ஓமந்தைச் சாவடி நோக்கி எறிகணைத் தாக்குதலை நடத்துவதால் அங்கிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினர் அங்கிருந்து விலகியுள்ளனர். நாம் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம்.
ஓமந்தைச் சோதனைச் சாவடி பிற்பகல் 1:00 மணிக்கே மூடப்படுகின்றது. இதனால் அவசர நோயாளர்கள் வவுனியாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை எழுந்துள்ளது. எனவே வழமை போன்று காலை 9:00 மணிக்கு முதல் மாலை 5:00 மணிவரை திறக்கப்பட வேண்டும்.படையினரின் இத்த முடிவால் ஏற்கனவே இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
pathivu.com
*****








No comments:
Post a Comment