Sunday, 9 November 2008

பரந்தனில் வான் தாக்குதல்: 5 பொதுமக்கள் படுகாயம்

பரந்தன் குமாரபுரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறீலங்கா வான்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இவ் வான்வழித் தாக்குதலில் 5 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் 12.50 மணியளவில் பூநகரி, பரந்தன் குமாரபுரம் ஆகிய பகுதிகளில் சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் 9 வீடுகள் கடுமையான சேதடைந்துள்ளன. வணிக நிலையம் ஒன்றும் குமாரபுர முருகன் ஆலயமும் தேசமடைந்துள்ளன.
-
செல்லத்துரை கமலாம்பாள் (அகவை 72)
நாகலிங்கம் சிவாராசா (அகவை 54)
சிவாராசா கெளரி (அகவை 63)
மனோகரன் விதுரன் (அகவை 2)
சிறீஸ்காந் தாரங்கன் (அகவை 12)
-
ஆகியோர் படுகாயமடைந்தவர்கள். காயமடைந்த அனைவரும் தருமபுரம் மருத்துவமனையில் சிகிற்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
pathivu.com
*****

No comments: