Thursday, 20 November 2008

** பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பிரித்தானியா வாழ் தமீழீழ மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானிய அரசு அங்கீகரிக்கக் கோரியும், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் தமிழக மக்களக்கு நன்றி தெவித்தும் இக்கவனயீப்புப் ஒன்று கூடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்றலில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் நேற்றுபுதன்கிழமை மாலை 3.30 முதல் மாலை 6.30 வரை இடம்பெற்றஇக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கவனயீர்ப்பு ஒன்று கூடலில் பிரித்தானியாவிலுள்ள சில அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நேற்றை நாள் பிரித்தானியப் பிரதமருடனான கேள்வி நேரம் என்பதனாலும் அதிகளவான பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தையீர்ப்பற்காகவும் இக்கவனயீர்ப்புப் ஒன்று கூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.



கடும் குளிரான நிலையிலும் பாடசாலைச் சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.தமிழின அழிப்பு, மக்களின் அவலங்களைத் தாக்கிய பதாதைகள் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி முழக்கமிட்டனர். இவற்றை விளக்கும் துண்டுப் பிரச்சுரங்கள் ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து
-
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
-
தமிழ்நாட்டுக்கு நன்றி -
-
பிரித்தானிய தமிழர்நன்றியுள்ள மக்கள் -
-
தமிழீழ மக்கள்அப்பாவித் தமிழர்கள் மீதான குண்டு வீச்சை நிறுத்து
-
ஸ்ரீலங்கா ஒரு பயங்கரவாத அரசு
-
பிரிதத்தானியா ஸ்ரீலங்கா அரசு மீது பொருளாதார தடையை விதி
-
ஐநா ஸ்ரீலங்கா மீது ஆயுத தடையை விதி
-
ஐரோப்பாவே ஜீ.எஸ்.பீ. பிளஸ் - யுத்த நிதிக்கான வழி
-
கோசங்கள் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தன.
_________
Pathivu.com

No comments: