பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச் செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:--
பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச் செய்துள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சிறீலங்கா அரசாங்கம் இராணுவ ரீதியில் அழிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இத்தகவலை வன்னிக்குச் சென்று திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இத்தகவலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
-
விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் வன்னிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.இதன்பின்னர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடும் போது விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடிக்க முடியாது. இறுதியில் ஒருவர் இருக்கும்வரை போராடுவோம் என வன்னியில் கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
-சிறீலங்கா அரசாங்கத்தின் பிழையான பரப்புரைகளினால் எதிர்வரும் சில மாதங்களில் யுத்தத்தின் பாதிப்பை தென்னிலங்கை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் புலிகள் தெரிவித்துள்ளனர்.ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டத்தை மேசையில் வைத்தால் அது பற்றி சமஷ்டி அடிப்படையில் பேசுவதற்கு தயார் எனவும் விடுதலைப் புலிகள் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளதாக சண்டே லீடர் மேலும் தெரிவித்துள்ளது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment