Thursday, 6 November 2008

** வைகோ, கண்ணப்பன் இன்று விடுதலை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையினரான கியூ பிரிவினர் இவர்கள் மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு விசாரணைகளுக்குத் தேவையான ஆதாரங்கள் மற்றம் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதை அடுத்தும், விசாரணைகள் முடிவுற்ற நிலையிலும் இவர்கள் இருவருக்கும் பிணை நீடிப்பு தேவையில்லை என கியூ பிரிவு காவல்துறையினர் நீதியாளரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு நீதியாளர் உத்தரவிட்டுள்ளார்.


நாட்டில் பிரிவினைவாத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றியதாகக் குற்றம் சுமத்தியே இவர்களை தமிழக அரசு கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
pathivu.com
*****

No comments: