நிஷா சுறாவளி ஏற்படுத்திய பெருவெள்ளத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து அவலப்படும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேண்டிய அவசர, அவசிய சேவைகளை வழங்குவதற்கு வசதியாக, வன்னிக்குள் செல்வதற்கு மனிதநேய அமைப்புகளுக்குக் கடந்த செப்ரெம்பரில் விதித்த தடையை இலங்கை அரசு உடனடியாக நீக்கவேண்டும் என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கோரியிருக்கின்றது.ஐ.நா. மற்றும் ஏனைய குழுவினர் மீதான தடையை இலங்கை அரசு இப்போதே நீக்கவேண்டும் என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இப்படிக் கோரப்பட்டிருக்கின்றது.
_____________








No comments:
Post a Comment