Tuesday, 11 November 2008

** வெளிநாட்டு கடற்படைக் கப்பல் ஒன்றில் புலிகளின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் சாத்தியம்

அண்மையில் களனிதிஸ்ஸ மின்நிலையம் மற்றும் மன்னார் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் பகுதிகளில் விமானக் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்ற புலிகள் இயக்கத்தினரின் சிறியரக விமானம் அல்லது விமானங்களை புலிகள் இயக்க விமான அணியைச் சேர்ந்த நபர்கள்தான் செலுத்திவந்தார்களா அல்லது அவர்களுடன் வேறுநாட்டைச் சேர்ந்த விமானிகளும் இணைந்து அந்த விமானக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டார்களா என்றதொரு சந்தேகமும் கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

நம்மில் பெரும்பாலோனோர் புலிகள் இயக்கத்தினர் யுத்தத்தில் மிகவும் கெட்டித்தனமானவர்கள் என்று முன்னர் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று புலிகள் தம்வசமிருந்த கிழக்கு மாகாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பெரும் பகுதி பிரதேசங்களையும் இழந்து படுதோல்வியடைந்த நிலையில் கிளிநொச்சி நகரம், முல்லைத்தீவு சார்ந்த ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுவிட்டனர். இப்போது புலிகள் இயக்கத்தினர் யுத்த தந்திரத்திலோ அல்லது தாக்குதல் நடவடிக்கைகளிலோ பெரிதாக ஒன்றும் திறமை வாய்ந்தவர்கள் அல்ல என்ற உண்மையை அரசபடையினர் மட்டுமல்ல, சிங்கள மக்கள், தமிழ்மக்கள் உட்பட அனைத்து உள்நாட்டுத்தரப்பினரும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவு அரசுகள், அமைப்புகள் அரசியற்பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டுகளில் வாழும் தமிழர்களும் நன்கு புரிந்துகொண்டுவிட்டனர்.

இதன் மூலம் யுத்தத்தில் திறமையும் பலமும் அற்ற புலிகளைத்தான் அரசபடையினர் வென்றுள்ளனர் எனக் கருதப்படும் வகையில் நமது வீரம் செறிந்த இராணுவத்தினரின் கௌரவத்தையும்,திறமையையும் தியாகத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. புலிகள் இயக்கம் இதுவரை காலம் வரை பெரும் யுத்தபலம் மிக்கவர்கள் போல் தோன்றியதற்கும் விமர்சிக்கப்பட்டதற்கும் முக்கிய காரணம் அண்மைக்காலம் வரையில் அரசபடையினர் உறுதியான தீர்மானமான முறையில் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்காததே ஆகும்.

இவ்வாறான ஒருநிலை ஏற்பட்டிருந்ததற்குக் காரணம் எமது இராணுவத்தினர் பெரும் எடுப்பிலான உறுதியான இராணுவ நடவடிக்கைள் எடுப்பதை மேற்கு நாடுகளும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்தியத்தலைவர்களும் விரும்பாத நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மூலமும் மற்றும் சமாதானம் என்ற போர்வையில் தலையீடுகள் மூலமும் தடுத்துவந்ததே ஆகும். முன்னர் ஆட்சியிலிருந்த நமது அரசுகளும் மேற்படி தரப்பினரின் அழுத்தங்கள், தலையீடுகள் காரணமாகவும் புலிகள் பெரும் யுத்தபலம் மிகுந்தவர்கள் என்ற அபிப்பிராயம் மற்றும் அச்சம் காரணமாகவும் புலிகளுடன் தீர்மானமானதும் உறுதியானதுமான யுத்தத்தில் ஈடுபடவில்லை. மேற்கு நாட்டு அரசுகளும் மற்றும் அரச சார்பு அமைப்புகளும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் மற்றும் புலிகளின் ஆதரவாளர்களும் புலிகள் இயக்கத்தினர் பெரும் யுத்தபலமும் தந்திரமும் மிக்கவர்கள் என்று உலகம் முழுவதும் பிரசாரம் செய்துவந்தனர். புலிகள் இயக்கத்தினரை இராணுவரீதியில் வெல்லமுடியாது என்றே பல்வேறு பிரதான நாடுகளும் கூறிவந்தன.

இவ்வாறு புலிகள் இயக்கத்தை பற்றி ஒரு யுத்தபல தோற்றத்தை வெளிநாட்டுச் சக்திகள் ஏற்படுத்தியதுடன் புலிகளிடம் காலாற்படை, கடற்படை மட்டுமன்றி விமானப்படையும் உள்ளது என்று உலகுக்கு காட்டும் வகையிலும் புலிகளுக்கு விமானத்தாக்குதலை மேற்கொள்ளச் செய்து முப்படைப் பலமும் புலிகளிடம் இருப்பதால் தனி அரசாக இயங்கக்கூடிய படைபலமும் இருப்பதாக உலகம் முழுவதும் கருதப்படும் வகையிலும் பேசப்படும் வகையிலும் பிரசாரங்களை மேற்குநாடுகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான விமானப்படை பல தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக புலிகள் இயக்கத்துக்கு சிறியரக விமானங்களை அமைத்துக்கொடுத்தது ஒரு சில வெளிநாடுகளின் திட்டமிட்ட கைங்கரியம் தான்.

புலிகள் இயக்கத்தின் விமானங்கள் எங்கிருந்து புறப்பட்டுவந்தது என்பது பற்றியும் திரும்பி எங்கு சென்று இறங்கியது என்பது பற்றியோ உறுதியான தகவல்கள் எதனையும் அன்றும் பெறமுடியவில்லை இன்றும் பெறமுடியவில்லை. தாக்குதல் நடத்தி விட்டு கிளிநொச்சி நோக்கி விமானங்கள் திரும்பிச் சென்றதாகக் கூறப்பட்டபோதும் குறித்த கிளிநொச்சிப் பிரதேசங்களின் சில பகுதிகளை தவிர ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் அரச படையினரின் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டோ, கட்டுபாட்டுக்குக் கீழோ இருக்கும் போது இராணுவத்தினருக்குத் தெரியாமல் விமானங்களை எங்கே, எப்படி நிறுத்தி வைக்க முடியும். அல்லது தாக்குதல் நடத்திவிட்டு புலிகளின் விமானங்கள் இராணுவத்தினரோ விமானப்படையினரோ கடற்படையினரோ அறியாத வகையில் எங்கே இறங்கமுடியும். எப்படி இறங்கமுடியும். எப்படித் தாழவோ, உயரவோ பறந்து செல்லமுடியும்.

மேலும் புலிகளின் விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் இலக்கு வைத்த நிலையங்கள் மீது குறி பெருமளவில் விலகாத முறையில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. தரையிலிருந்து இராணுவத்தினரின் நிலையங்கள் மீது இலக்குத் தவறாத முறையில் புலிகள் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் குறைவாகவே உள்ளன. இவ்வாறு தரையிலிருந்து இலக்குத் தவறாக தாக்குதல்களை நடத்தமுடியாத புலிகள் இயக்கத்தினர் வானத்திலிருந்து இலக்குத்தவறாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது எப்படி அவர்களால் முடிந்தது? தரையில் மாபெரும் வெற்றிகளை ஈட்டியுள்ள புலிகளின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடிக்கமுடிந்த அரசபடையினருக்கு இதுவரையில் புலிகளின் விமானத்தாக்குதல்களை முறியடிக்கவோ புலிகளின் அற்ப விமானப்பலத்தை அழிக்கவோ முடியாமற் போனதற்கான பிழை யாருடையது? இது சம்பந்தமாக உடனடியாக ஆராய்ந்து மேற்படி கேள்விகளுக்கு விடை காண்பது தேசத்தின் பாதுகாப்புக்கும் தேசநலத்துக்கும் மிக அத்தியாவசியமாகும்.

மேற்படி விடயங்களைப் பார்க்கும் போது வன்னியில் புலிகளுக்கு எதிரான அரசின் இராணுவ நிலைப்பாட்டையும் வன்னி விடுவிப்புக்கான தீவிர இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திவைப்பதற்கான முயற்சிகளை மேற்குலகநாடுகள் கைவிடவில்லை என்றே விளங்குகிறது. இந்த வகையில் தான் அண்மையில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஸ்ரீலங்கா அரசியலிலும் உள்நாட்டு விவகாரத்திலும் தலையிடும் வகையில் செயற்பட்டுள்ளார்.புலிகள் இயக்க பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் இறுதியாகவும் தீர்மானமாகவும் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த முக்கிய சந்தர்ப்பத்தில் அமெரிக்கத் தூதுவர் சென்னைக்குச் சென்று அரசின் யுத்தத்திற்கு எதிராக அரசியல் தீர்வு ஒன்றை பற்றிப் பேசவுள்ளார். இந்திய தமிழக முதலமைச்சர் கருணாநிதி மூலமாக அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே அவருடைய நோக்கமும் தேவையுமாக இருக்கிறது. பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் இந்த அரசியல் தீர்வுக்கான அமெரிக்காவின் அழுத்தம் மேலும் அதிகமாகும்.

இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும்.

விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கோ அல்லது புறப்பட்டுவந்து தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது தாக்குதல் நடத்தியபின் பாதுகாப்பாகச் சென்று இறங்குவதற்கோ இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெரும் பகுதி வன்னிப்பிரதேசதத்தில் பாதுகாப்பான இடம் இருக்கமுடியாது. ஆனால் விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய, தாக்குதலுக்காக புறப்பட்டுவரக்கூடிய , தாக்குதலின் பின்னர் பாதுகாப்பாக திரும்பிச் சென்று இறங்கக்கூடிய அனைத்துவசதிகளும் கொண்ட வெளிநாட்டுக் கடற்படைக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக்கப்பல்கள் எந்த நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களாக இருக்கும் என்பதை விடயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

திவயின, தெக்ம பாதுகாப்பு விமர்சனம்: 2/11/2008.

Tinakkural.com
******

No comments: