Sunday, 16 November 2008

** கிளிநொச்சி மக்கள் குடியிருப்புகள் மீது படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்!

இலங்கைப் படையினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் நேற்று சனிக்கிழமை காலை வரை கிளிநொச்சியின் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது அகோர எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் பல குடியிருப்புகள் சேதமடைந்தன. ஏற்கனவே இந்த எறிகணை தாக்குதல்களுக்கு அஞ்சி பொதுமக்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.


பலர் இன்னும் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக படையினர் கிளிநொச்சியின் யாழ்ப்பாணம் கண்டி வீதியை இலக்குவைத்து தமது எறிகணைத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஆகியன இந்தப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
__________
Tamilwin.com

No comments: