வன்னி நோக்கிய ஆக்கிரமிப்பு படைநடவடிக்கையை விரைவு படுத்துமாறு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச படைத் தளபதிகளிடம் உத்தவிட்டுள்ளார். தமிழகத்தில் எழுந்துள்ள யுத்த நிறுத்த அழுத்தம் காரணமாக ஒரு குறுகியகால யுத்த நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த குறுகிய கால யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றிய வெற்றிச் செய்தி மூலம் தென்னிலங்கை மக்களை மகிழ்ச்சிப் படுத்த மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.இததேநேரம் வலிந்த தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் காலமான இக்காலத்தில் ஒரு குறுகிய கால யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதால் விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து படையினரைத் தற்காத்துக் கொள்ளவும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தி வலுப்படுத்தவும் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத் ஒன்றை அறிவிப்பதன் ஊடாக விடுதலைப் புலிகளை சிக்கலில் மாட்டிவிடும் திட்டம் வகுக்கப்படுகின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் யுத்த முன்னெடுப்புகளுக்கு அமெரிக்க - இந்திய சக்திகளின் கூட்டு நடவடிக்கைகளே காரணம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
puthinam.com
*****








No comments:
Post a Comment