இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து போரை நிறுத்தக் கோரியும் இன்று செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன் தலைமையில் பல்வேறு கட்சிகளும் இணைந்து தமிழகம் முழுவதும் சாலை, மற்றும் தொடருந்து மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தஞ்சை, திருவாரூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாகை உள்பட தமிழகம் முழுவதும் இன்று நடந்த ரயில் மற்றும் சாலை மறியலில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

_________
Pathivu.com

No comments:
Post a Comment