Saturday, 15 November 2008

** நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - மாவை!

சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரால் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடருந்து முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது:-

இலங்கைப் போரியல் வரலாற்றில் சிறீலங்காப் படையினர் நிலங்களைக் கைப்பற்றுவதும், அதனை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்றுவதும் மாறி மாறி நடைபெறும் சாதாரண நிகழ்வுகள். இதனை எடுத்துக் கொண்டு நாம் வெற்றி பெற்றுவிட்டாக பெருமை கொள்ளக்கூடாது. பூநகரியைக் கைப்பற்றியுள்ளமைக்கு விமல் வீரவன்ச பாராட்டுத் தெரிவித்து உரையாற்றிதைத் தொடர்ந்து அதற்கு பதில் வழங்கும் முகமாகவே மாவை.சேனாதிராஜா இக்கருத்தினைத் தெரிவித்தார்.

நாடு தற்போது இருக்கின்ற சூழில் இவ்வாறான பாராட்டுத் தேவைதானா? இதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எந்தவொரு அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. தென்னிலங்கைத் தலைவர்கள் இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும், அனைத்துலக சமூகத்திற்கம் இல்லை. இந்த நிலையில் தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என அவர் அங்கு மேலும் உரையாற்றினார்.
pathivu.com
******

No comments: