இலங்கை தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் தவறுகளை வரலாறு மன்னிக்காது என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் ஈழத்தமிழர் சிக்கலும், இந்தியாவும் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:காங்கிரஸில் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்காங்கிரஸ் வரலாறு தெரியாத தங்கபாலு, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட முடியாது என்று கூறுகிறார்கள்.ஒரு காலத்தில் அந்த கட்சியில் நானும் இருந்துள்ளேன் என்பதை தற்போது நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.மனித நேயம், உறுதியான செயல்பாடு, தெளிவான சிந்தனை இல்லாதவர்கள் இந்திய ஆட்சி பீடத்தில் உள்ளனர்.இன படுகொலையை உலக நாடுகளே கண்டிக்கிறது. ஆனால் இந்தியா வேடிக்கை பார்க்கின்றது.
முதல்வர் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பினர். அதற்கு இதுவரை கருணாநிதி உரிய பதில் அளிக்கவில்லை.திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி இருந்தால் அதை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் செய்திருப்பர்.முதல்வர் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு மற்ற கட்சிகள் உதவி செய்யவில்லை என்பதால் அவர் எது வேண்டும் என்றாலும் பேசக்கூடாது.இலங்கை தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் தவறுகளை வரலாறு மன்னிக்காது என்றார் நெடுமாறன்.
Thatstamil
*********








No comments:
Post a Comment