Sunday, 14 December 2008

** தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து இராஜதந்திர நடவடிக்கைகளைச் செய்தவர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் ஆவார்.



தமிழினத்தின் இராஜதந்திர முகமாக பன்னாட்டுத்தரப்புடன் தொடர்புகளைப் பேணி பேச்சுக்களில் பங்குபற்றியவர் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றிய தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006 இல் இலண்டனில் புற்றுநோயால் சாவைத்தழுவினார்.


இன்று தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நிகழ்வுகள் தாயகத்திலும் பலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் எழுச்சியுடன் நடைபெற இருக்கின்றது.

_______________

No comments: