Sunday, 14 December 2008

** விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைபெற்ற முயற்சி!

விடுதலைப் புலிகள் யாழ்குடா நாட்டைக் கைபெற்ற முயற்சி எடுத்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளதாக வாரவெளியீடான சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டு்ள்ளது.

வன்னியில் போர் உக்கிரமடைந்துள்ள வேளையில் யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் மீது தாக்குதல் நடாத்தி, யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான முன்னேற்பாட்டில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினருக்கான நெருக்கடி அதிகரிப்பதாகவும், விடுதலைப் புலிகள் தமது அனுபவம் மிக்க படையணிகளை தாக்குதலிற்கு பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகவும், இதனால் போரின் தன்மை மாற ஆரம்பித்துள்ளதாகவும்

இதேவேளை யாழ்குடா நாட்டின் சில பகுதிகளில் பெருந்தொகை உணவுகள், மருந்துப் பொருள்கள், சில ஆயுதங்களும் மீட்க்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் விடுதலை புலிகள் ஊடுருவியிருப்பதை வெளிப்படுத்துவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_________
Pathivu.com

No comments: