சீடொட் நிறுவனத்தினரால் சிறுவர் உதவி கல்வி மற்றும் புனர்வாழ்வு (சி.ஏ.ஆர்.ஈ) நிகழ்ச்சித்திட்டம் -கனடா நிறுவனத்தினரது நிதி அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நம்பிக்கைப் பள்ளிச் சிறார்களது நத்தார் பண்டிகையை முன்னிட்டதான கிறிஸ்மஸ் மகிழ்வு நிகழ்வுகள் அவ்வப்பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இம் மகிழ்வு நிகழ்வுகளில் நத்தார் தாத்தா தோன்றி, கனடாவிலுள்ள புலம்பெயர்வாழ் தமிழ் மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஆர்.ஈ நிறுவனத்தினர் வழங்கியதாக தாம் எடுத்து வந்த இனிப்புக்களை சிறார்களிற்கு வழங்கி அவர்களை மகிழ்வித்து வருகின்றார்.
அவருடன் சேர்ந்து சிறார்களும் ஏனையோரும் தமது துன்பங்களை மறந்தவர்களாக ஆடிப்பாடி மகிழும் காட்சிகைள காணக்கூடியதாக உள்ளது. மேலும் சீடொட் நிறுவனத்தினர் வாராந்தம் இடம்பெயர்ந்த சிறார்களை மகிழ்வூட்டும் நிகழ்வுகளை தொடர்ந்து நடாத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் கல்மடு தொப்பி கடையடி இளங்கோ குடியிருப்பு சிறார்கள் சீடொட் நிறுவுன ஆற்றுப்படுத்துனர்களினால் மகிழ்வூட்டப்பட்டனர். அத்துடன் அவ்விடத்தில் அமைந்துள்ள சீடொட்டின் நம்பிக்கைப்பள்ளிக்கான கூரை விரிப்புக்கள் இந்நிறுவனத் தலைவரும் சிறிலங்கா பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான க.செல்வநாயகம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com

No comments:
Post a Comment