Friday, 19 December 2008

** கிளிநொச்சி சிறிலங்காப் படையினருக்கு மரண முற்றுகைக் களமாகவுள்ளது! - பி.இராமன்

சிறிலங்கா தரப்புக்கு ஏற்படும் பெரும் எண்ணிக்கையிலான படையப் பொருட்களின் இழப்பு புலிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அவர்களின் கைகளுக்குச் செல்கின்றன.- றோ முன்னாள் செயலாளர் பி.இராமன்

கிளிநொச்சி களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

பாரிய ஒரு இலக்குடன் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாக புலிகள் போர்க்களத்தில் நின்றனர். வன்னி போர்களத்தில் சிறிலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா படைத்தரப்பு வெளிப்படுத்துவதைவிட புலிகள் கூறுவது உண்மைக்கு நெருக்கமானதாக உள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பினர் 170 பேரை கொன்றுவிட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர். படைத்தரப்பு 25 பேரை மட்டுமே இழந்திருந்ததாக கூறியது. ஆனால் விடுதலைப் புலிகளோ கொல்லப்பட்ட 36 படையினரின் படங்களை வெளியிட்டு மேலதிக இழப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தியதை நிரூபித்திருக்கின்றனர்.

புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து புலிகள் அலுவலகங்களை மூடிவிட்டு சென்றுவிட்டார்கள. இப்போது எதுவும் இல்லை என தெரித்த சிறிலங்கா படையினருக்கு மரண முற்றுகைக் களமாக அது உள்ளது.

சீனா மற்றும் ஈரான் நிதியுதவியுடன் ஆயுதங்களை சிறிலங்கா பெரும் எண்ணிக்கையில் குவித்தது. ஆனால் புலிகளுடன் ஒப்பிடுகையில் படையினர் நன்கு பயிற்றுவிக்கப்படவில்லை.
_________
Pathivu.com

No comments: