Sunday, 24 August 2008

22-தாயகத்தில் எம் உறவுகளின் பேரவலம்!

புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு
வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு…


தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்கழுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல்..? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான்.


10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் புலத்தில் வாழும் போது நாம் ஏன் யாரிடமும் கை ஏந்த வேண்டும். அரச அரச சார்பற்ர நிறுவனங்களிடம் நாம் கை ஏந்த வேண்டிய தேவை இல்லை.எமக்கு என்று “த.பு.கழகம்” “செடோட்” போன்ற அமைப்புக்கள் உள்ளன அவர்கள் ஊடாக உதவ முடியும். நாம் எதற்கு சிங்களவனிடம் உதவி கேட்க வேண்டும்.அவன் ஒரு அமைச்சர்(?) சொல்கிறான் வன்னியில் தமிழர்கள் நின்மதியாக வாழ்கிறார்களாம்.இவனிடம் எதற்கு நாம் உதவி கேட்க வேண்டும்?கேட்டால் கொடுப்பவனா இவன்?


ஆனால் நாங்கள் இங்கு புலத்தில் புலிகள் ஏன் அடிக்கவில்லை. அவர்கள் அடிக்காமல் விட்டது பிழை என்பது போன்ற விவாதங்கள் செய்து கொண்டு இருப்பது வேறு நாட்டார் எமது பிரச்சினைகளை நோக்குவது போல் உள்ளது.அதாவது எமது மக்கள்எமது இரத்த உறவுகள் என்ற நினைவு இன்று பலருக்கு இல்லை என்பதுதான்வேதனைக்குரிய விடையம். நம் அனைவருக்கும் ஒரு இடப்பெயர்வுஅனுபவம் இருக்கும் நாம் அந்த கணப்பொழுதினை ஒரு கணம் நினைப்போமானால் நிச்சயமாக உதவி செய்ய முடியும்.


எம் தேசத்தில் ஒரு குழந்தை தானும் பசியால் இறக்கக் கூடாது அவ்வாறு நிகழுமாக இருப்பின் அதனுடைய பொறுப்பு சிங்களனோ அல்லது சிங்கள அரசோ கிடையாது அதனுடைய பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனுடையதும்தான். .மக்கள் மீதான விமானத் தாக்குதல் செல் தாக்குதல் போன்ற காடைத்தனமான செயல்களுக்கு சிறீலங்கா அரசு(?) பொறுப்பு.இடப்பெயர்வுக்கும் அவர்கள்மீது குற்றம் சுமத்தலாம் ஆனால் அங்கு ஒரு உயிர்தனிலும் பசியால் போகுமாக இருந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு என்பதை மறந்துவிடலாகாது. சிங்களவன் நம் எதிரி.அவனுடைய நோக்கம் தமழர்களை அழிப்பதுதான்.அவனை நாம் எதிர்த்துப் போராடுகிறோம். எனவே அவனுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.

நாம் இங்கு சில முக்கியமற்ற நிகழ்வுகளுக்கு முக்கியம் கொடுத்து பல செலவுகளை செய்கிறோம். இவ்விடத்தில் ஒன்றை நாம் கவனமாக விளங்கிக் கொள்ள வேண்டும் அதாவது உதாரணமாக நாம் இங்கு சாப்பிடாமல் அங்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறவில்லை சாப்பிட்ட பின்பு சாப்பிடும் “பீடாவை-கோலாவை” தவிர்க்க முடியும் என்றுதான் சொல்கிறேன்.கேயில்களுக்கு திருவிழாஎடுக்கிறோம் தெருவில் தேங்காய் உடைக்கிறோம் எம் இரத்தங்கள் உணவிற்காக வாடுகையில் இங்கே கடவுளின் பெயராலும் கொண்டாட்டங்கள் என்ற பெயராலும் பல கிலோ,பல வகை உணவு வகைளை கொட்டிச் சிந்தி வீணடிக்கிறோம். நம்மை பெற்ற தாயும் நாம் பிறந்த பொன்னாடும் அழிவின்- துயரின் விழும்பில் இருக்கும் போது நாங்கள் ஆடை அணிகள் ஆடம்பரங்கள் என்று பகட்டுக்காட்டி ஆண்டவனை பூசிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை நம்மால் முடிந்த உதவியை எம் உறவுகளுக்கு செய்யவேண்டும்.மற்றவர்களிடம் நாம் கையேந்த வேண்டிய எமக்கு தேவை இல்லை.நாம் கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பில் ஒரு தெகையில் எம் உறவுகள் ஒரு நேரம் பசி தீருமானல் அப் பணத்திற்கான பெறுமதி நிச்சயமாக கணக்கிட முடியாது.

நம்மால் முடிந்த உதவியை எம் உறவுகளுக்கு செய்யவேண்டும். மற்றவர்களிடம் நாம் கை ஏந்த வேண்டிய தேவை எமக்கு இல்லை.நாம் கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பில் ஒரு தொகையில் எம் உறவுகள் ஒரு நேரம் பசி தீருமானால் அப் பணத்திற்கான பெறுமதி நிச்சயமாக கணக்கிட முடியாது.

இங்கு பல உறவுகள் சொல்வார்கள் எங்களுக்கு உதவி செய்ய விருப்பம் ஆனால் யாரிடம் கொடுப்பது என்று தெரியாதென. தற்போது சில நாடுகளில் நிலமைகள் சற்று இறுக்கம்தான் ஆனால் நம் உறவுகளுக்கு உதவுவதற்கு எங்கும் பிரச்சினை இல்லை. நாம் உதவி செய்வதற்க்கு பல வழிகள் உண்டு இங்கு “த.பு.கழகம்” உள்ளது அதுமுடியாவிட்டால் உங்களுக்கு அறிமுகமான அமைப்புக்கள் ஊடாக அல்லது, தாயகத்தில் உள்ள வேறு உறவுகள் ஊடாக என பல வழிகளில் செய்ய முடியும்.

எனவே தயவுசெய்து அனைத்து உறவுகளும் எமது தாயக உறவுகளுக்கு தொடர்ந்தும் எம்மாலான உதவிகளை செய்வோம்.

“செடோட்” தொடர்புகளுக்கு….
E-mail- sedot.uthavi@gmail.com
Tele phone-0041 762944857

யாழவன்.

No comments: