திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

திருகோணமலை உட்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது நேற்று முன்நாள் இரவு 9:15 மணிக்கு வான்புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் கடற்படையினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடற்படைத் தலைமையகத்தில் இருந்த படைய தங்ககங்கள் வான் புலிகளின் துல்லியமான குண்டுவீச்சுக்கு இலக்காகின.
இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டனர். 35-க்கும் அதிகமான கடற்படையினர் படுகாயமடைந்தனர்.
அத்துடன் படையத்தளப் பகுதியும் பாரிய அழிவுக்கு உள்ளானது. தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய வான் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:









No comments:
Post a Comment