Wednesday, 10 September 2008

25.வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின.

வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கா படைத்தலைமையகத்தின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த கண்காணிப்பு கருவி (ராடர்) முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. வான்புலிகளின் வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளன. படைத்தளத்தின் மீது கேணல் கிட்டு பீரங்கி படைப்பிரிவினர் நடத்திய செறிவான ஆட்லறி தாக்குதலில் படையினருக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கா படைத்தளத்தின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படையினரின் வான் கண்காணிப்புக் கதுவீ அல்லது ராடார் நிலையத்தை இலக்குவைத்து இன்று அதிகாலை 3:05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித்தாக்குதலை நடத்தினர். இதில் அந்த கதுவீ - ராடர் - நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது.
அதிஉயர் பாதுகாப்புக்கொண்ட சிறிலங்கா வான்படை மற்றும் வன்னி கூட்டு நடவடிக்கை தலைமையகம் உள்ளடங்கிய தளத்திற்குள் கரும்புலிகள் ஊடுருவி உள்நுழைந்து தாக்குதல் நடத்திய அதேவேளை, இவர்களின் உதவியுடன் படைத்தளத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி தாக்குதல்களும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரின் செறிவான ஆட்லறி பீரங்கித்தாக்குதலும் நடத்தப்பட்டன.
இத்தாக்குதல்களில் சிறிலங்கா படையினர் 20-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வெடிபொருள் களஞ்சியங்களும் தொலைத்தொடர்புக்கோபுரமும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும் வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையகமும் சிறப்புப்படையணியின் வன்னித்தலைமையகமும் பெரும் சிதைவுக்குள்ளாகின.
தாக்குதல் நடத்திய வான்புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின.
இத்தாக்குதல்களில் கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவைத்தழுவி தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகஞ்செய்தனர்.
சிங்கள படைத்தலைமைக்கும் அரசுத்தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில் தாய்மண் விடுதலைக்காக வித்தானவர்களின் விவரம்:


கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
கரும்புலி மேஜர் ஆனந்தி
கரும்புலி கப்டன் கனிமதி
கரும்புலி கப்டன் முத்துநகை
கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
கரும்புலி மேஜர் நிலாகரன்
கரும்புலி கப்டன் எழிலகன்
கரும்புலி கப்டன் அகிலன்
கரும்புலி கப்டன் நிமலன்


ஆகியோர் வீர காவியமாகினர்.

jaalavan@gmail.com

No comments: