அக்கராயன் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படையினர் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவை மேலும் தெரிவித்ததாவது:
அக்கராயனுக்கு தெற்குப்புறமாக உள்ள முன்னணி காவலரணிலிருந்து அக்காராயனுக்கு கிழக்குப் பக்கமாக உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் மீது - முறிகண்டி பக்கமாக உள்ள ஏ - 9 பாதையை கைப்பற்றும் நோக்குடன் - இன்று சிறிலங்கா படையினரால் வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சிறிலங்கா படையின் நான்கு பற்றாலியன்களைச் சேர்ந்த சிறப்பு படையினர் இந்நடவடிக்கையில் இறக்கப்பட்டனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை தொடங்கப்பட்ட படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் இம்ரான் - பாண்டியன் அணிகளைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் சமரிட்டன.
அக்கராயன் பிரதேசத்திற்கு விடுதலைப் புலிகளின் பிரதான படையணிகள் நகர்த்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 57 ஆவது படையணி தளபதி ஜகத் டயஸ் மற்றும் 58 ஆவது படையணியின் கூட்டுத் தளபதிகளான பிரகேடியர் சவீந்திர டி சில்வா, நிர்மல தர்மரட்ன ஆகியோரின் திட்டத்திற்கேற்ப இந்த வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். என்று படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
நன்றி:புதினம்.கொம்
for contact: jaalavan@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment