இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும்,இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது. சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. கருத்து கேட்கப்பட்டவர்களில் 45% பேர் பெண்கள். கருத்துக் கணிப்பில் தெரியவந்த முக்கிய தகவல்கள் வருமாறு:
இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் தரும் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் சுற்றி வளைக்கப்படும் நிலை ஏற்படுமானால், தமிழர்களுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்குச் செல்ல வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிவரும் போராளிகள் இயக்கம், ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான்.
ஈழம் மலர்வதற்காக பணமும் பொருளும் தரத் தயார். (40% பேர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர்) இலங்கைப் பிரச்னை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (94% பேர் இக்கருத்தை வலியுறுத்தினர்.) ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் நளினியின் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே எதிர்த்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை வெகுசிலர்தான் ஆதரித்தனர். இனி கேள்விகளும், அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் வருமாறு:
(பதில் அளித்தவர்கள் எண்ணிக்கை சதவீதத்திலும் தரப்படுகிறது)
ஈழத் தமிழருக்காக என்ன செய்ய விருப்பம்?
பந்த் நடத்தினால் பங்கேற்பேன்-8.
தமிழ்நாட்டில் புகலிடம் தருவதை ஆதரிப்பேன்-22.
ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை-16.
பத்திரிகைகளுக்குதான் ஆர்வம், எனக்கு இல்லை-14.
ஈழத்துக்காக பணம், பொருள் தருவேன்-40.
புலிகள் தோற்கடிக்கப்பட்டு, பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்?
ராஜீவ் கொலைவழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு அவரை அனுப்பக் கோருவேன்-6.
தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் தரப்பட வேண்டும்-23.
இலங்கை அரசே விசாரிக்க வேண்டும்-12.
ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்-25.
இலங்கை இராணுவம் அவரைக் கொன்றுவிடும்-3.
அப்படி நடக்காமலிருக்க நமது இராணுவத்தை அனுப்ப வேண்டும்-31.
தமிழக அரசு உடனே கவனிக்க வேண்டிய பிரச்சினை என்ன?
நாளுக்குநாள் மோசமாகிவரும் மின்சப்ளை நிலைமைதான்-32.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவது-6.
தமிழ்நாட்டில் பயங்கரவாதம் பரவாமல் தடுப்பது-20.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவது-40.
புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டுமா?
இப்போது கூடாது-15.
எப்போதுமே கூடாது-8.
சொல்ல முடியாது, தெரியாது-26.
ஆமாம், தடையை விலக்க வேண்டும்-51.
புலிகள் இயக்கம் பற்றி கருத்து என்ன?
பயங்கரவாதிகள்-12.
ஈழ விடுதலைக்காகப் போராடுகிறவர்கள்-30.
ஈழத்தமிழர் நலனுக்காக பாடுபடுகிறவர்கள்-22.
ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான குரல்-36.
நம் அரசியல் தலைவர்களின் கடமை என்ன?
இலங்கைத் தமிழருக்காக பந்த் நடத்துவது-18.
கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பது-12.
சிறப்பு வரிகளை விதித்து நிதி திரட்டுவது-10.
இலங்கையே தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவது-26.
மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும்-34.
நளினியின் தண்டனை குறைக்கப்பட வேண்டுமா?
ஆமாம், போதுமான காலம் சிறையில் இருந்துவிட்டார்-26.
மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரின் சக கைதிகளையும் விடுவிக்க வேண்டும்-10.
பிரியங்காவே மன்னித்து விட்டதால் விடுவிக்க வேண்டும்-12.
வருத்தம் தெரிவித்து விட்டதால் விடுவிக்க வேண்டும்-18.
விடுதலை செய்யக்கூடாது-34.
தமிழக மீனவர் சுடப்படாமல் தடுக்க என்ன வழி?
இந்திய, இலங்கை கூட்டு ரோந்து-20.
புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளைத் தடுப்பது-10.
மேலே கூறிய இரண்டும் அல்ல-6.
இலங்கைக் கடல்பரப்பில் மீன் பிடிக்காமல் இருப்பது-24.
தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது சரியா?
ஏற்க முடியாது, காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிடுவதைப் போல-8.
சிந்தனை வறட்சியையே இது காட்டுகிறது-10.
வாக்காளர்களைக் கவரும் மலிவான உத்தி-28.
ஆபத்தாக முடியும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வதை விரும்பாத போக்கு-10.
அங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் சரியே-44.

[Illustration Courtesy: Indian Express]
*****








1 comment:
It's a nice blog.
Beautiful pictures.
Please visit:
http://holidayinparadise.blogspot.com
Keep blogging.
Good job.
Post a Comment