Sunday, 19 October 2008

*** தமிழர் விரோத அணியில் கூட்டு இணையும் சக்திகள்..

ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன.அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச்சி என்று காட்டி, அதனை அடக்குவதற்குக் கங்கணம் கட்டிப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது.மறுபுறத்தில், தென்னிலங்கை பௌத்த-சிங்களப் பேரினவாதம் புரியும் கொடூரங்களை மறைத்து, அப்பேரினவாதத்தின் இனப்படுகொலை நடவடிக் கைகளை ஒளித்து, தென்னிலங்கைச் சிங்கள அரசு நியாயமாகச் செயற்படுகின்றது என்று இந்திய மக்களுக்கு-அப்பத்திரிகை காட்ட முயல்கிறது.1980 களின் கடைசியில் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியைத் தவறாக வழி நடத்தி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற பெரும் சகதிக் குள் விழவைத்தவர்களில் முக்கியமானவர் அப்போது ‘த ஹிண்டு’வின் இணை ஆசிரியராக இருந்த இதே ராம்தான்.

ஈழத் தமிழ் மக்களின் மீது இந்தியாவினால் வல்வந்தமாகத் திணிக்கப்பட்ட அந்த இலங்கை - இந்திய, ஒப்பந்தத்தின் மூல வடிவமைப்பாளர்களுள் பிரதானமானவர் இந்த ராம்.அவரது பங்களிப்போடு உருவான இந்த இலங்கை - இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாமல், செயலிழந்து, உக்கி, உருக்குலைந்து வெறும் காகிதா தியாகிப் போனதால், அதற்குக் காரணமானவர்கள் புலிகள் என்று கருதி அவர்கள் மீது சீற்றமும், வெறுப் பும், எரிச்சலும், விசனமும் கொண்டுள்ளார் இந்த ஆசிரியர் ராம்.அதனால்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத் தையும் மீறிய ஒரு விடயத்துக்காகத் தமிழகத்தில் எழுச்சி கிளம்பி-அந்தக் கிளர்ச்சி ஆதரவு, ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமைக்காகப் போராட்டம் நடத்தும் புலிகளுக்கு சாதகமான பண்பியல் தமிழகத்தில் பீறிட்டு எழுந்த போது -அதை சகிக்க முடியாமல் துள்ளிக் குதிக்கிறார் ‘த ஹிண்டு’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.

சுமார் மூன்று வருட கால நிறைவேற்று அதிகார ஆட்சியை நிறைவு செய்யும் கட்டத்தில் இருக்கும் சிங்களத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இக்கா லத்தில் ஈழத் தமிழர்களுக்குத் தந்தது எல்லாம் போரும், இராணுவ நடவடிக்கைகளும், யுத்தக் கொடூரங்களும், பேரழிவுகளும், அனர்த்தங்களும், அகதி வாழ்க்கையும், ஏதிலி நிலைமையும்தான். ஈழத் தமிழர்கள் மீது இத்தகைய கொடூரத்தை - கோரத்தை - மோசமாக ஏவிவிட்ட தென்னிலங்கைத் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேறு யாருமில்லை என்ற தனிப்பெரும் பெருமையைத் தென்னிலங்கை மக்கள் மத்தியில் சுவீகரித்துக் கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே. அவருக்கு எதிரான கிளர்ச்சி தென்னிந்தியாவில் - தமிழகத்தில்-வெடித்திருக்கும் இந்நிலையில் -ஈழத் தமிழர்களுக்கு நியாயம்-நீதி-வழங்கப்போகும் ஒரே ஆட்சித் தலைமை மஹிந்தரின் அரசுதான் என்ற பிரசாரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது ‘த ஹிண்டு’.இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு நீதி யான - நிலைத்த தீர்வைத் தருவதுதான் தனது ஒரே நோக்கு - இலக்கு - என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார் என்ற விடயத்தை பெரும் எடுப்புப் பிரசாரமாக முன்வைக்கிறது இந்தப் பத்திரிகை.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி முறையில் - போர்மூலம் - சமாதான வழியில் - தீர்வு காண்பதற்கு இருந்த சகல வாய்ப்புகளையும் சிதறடித்து, இணக் கத் தீர்வுக்கான வாய்ப்புகளை தனது பௌத்த - சிங்கள மேலாதிக்கச் சிந்தனையில் எழுந்த பேரினவாத மேலாண்மைப் போக்கினாலும் இராணுவ வல்லா திக்க வெறியினாலும் குழப்பியடித்தவர் இந்த சிங் களத்தின் இன்றைய தலைவர். புலிகளை அடியோடு அழித்து, இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழருக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு பேரம்பேசும் வலுவை இல்லாதொழித்த பின்னர் தமிழருக்குத் தீர்வைத் தருவாராம் மஹிந்தர். அதை நம்பி - புலிகளையும் காட்டிக் கொடுத்துவிட்டு - காத்திருக்க வேண்டுமாம் தமிழர்கள் - என்ற மாதிரிப் போகின்றது ‘த ஹிண்டு’ வின் கதை.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அதைத் துண்டாடி, பெரும் படை நடவடிக்கைகள் மூலம் அதை சின் னாபின்னமாக்கிச் சீரழித்து நாசமாக்கிய பின்னர், தீர்வு என்ற பெயரில் மஹிந்தரின் அரசு தூக்கிப் போடும் பிச்சையை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று‘த ஹிண்டு’ எதிர்பார்ப்பது அதன் நூற்றி முப்பது ஆண்டு காலப் பணிக்கு பேரிழுக்குத் தரும் வழிகாட்டலாகும்.
******

No comments: