ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் நாளை புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநில செயலாளர் ஆர்.திருமலை ஊடகவியலாளர்களுக்கு நேற்று தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா சிறிலங்காவுக்கு இராணுவ உதவி அளித்திருப்பது தற்போது அம்பலமாகிவிட்டது.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 256 பொறியிலாளர்களும், வான்படையைச் சேர்ந்த 25 வானோடிகளும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் தற்போது அவர்களுக்கு அரியானாவில் பயிற்சி தரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்திய அரசின் இந்தப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
சிறிலங்காவுக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்கக்கூடாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாடசாலை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.
கோவை, தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் போராட்டம் தீவிர அளவில் நடைபெறும். இந்த போராட்டத்தை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார் அவர்.
puthinam.com
*****
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment