Tuesday, 7 October 2008

*** மகிந்த, பசில், கோத்தபாய ஆகியோருக்கு பாராளுமன்றில் ஆயுததாரி கருணா நன்றி தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் சிங்கள நண்பர்களாகிய மூவேந்தர்களுக்கு துணை இராணுவக் குழுவின் ஆயுததாரி கருணா நன்றி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் கூட்டுவகித்த ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாமாவையடுத்து ஒட்டுக்குழுக்களின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று காலை பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதையடுத்து முற்பகல் 11.00 மணியளவில் சிங்கள நண்பர்களாகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பஷில்ராஜக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ஆகியோர் தனக்கு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நன்றி தெரிவிப்பதாக சபையில் கூறினார். அவரின் இன்றைய உரை பிதிர்கடன் தீர்ப்பது போன்றதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பதவி ஏற்பு வைபத்தின் போது துணை இராணுவக் குழுவின் மற்றொரு தலைவரும் கிழக்கு முதல் அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேனத்துரை சந்திரகாந்தன், துணை இராணுவக் குழுவின் தலைவியும் மற்றும் மாநகர சபை மேயருமான சிவகீர்த்த பிரபாகரனும் ஆகியோர் கலந்து முரளிதரனை பாராளுமன்றத்தில் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
pathivu.com
*****

for contact: jaalavan@gmail.com

No comments: