தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக்களைந்துவிட்டு, தமிழனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரு மையத்தில் இணைவேண்டும் என்பது அண்ணன் பிரபாகரனின் ஆசையாகும் என தமிழ்த்திரைப்பட இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான சீமான் தெரிவித்துள்ளார்.குமுதம் சஞ்சிகைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அந்த செவ்வியில் மேலம் கருத்துக்களை தெரிவித்திருந்த அவர், தமிழ் ஈழத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன, அனால் அவற்றுக்கான திறவுகோல்கள் உலகத்தமிழன் ஒவ்வொருவனுடைய கைகளிலும் உள்ளன.எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்தக்கதவை திறக்கவேண்டிய பெரும் கடமையுடையவர்களாக உள்ளோம்.ஈழத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தமிழன் மரணத்தைச் சந்தித்துவருகின்றான். உணவு மற்றும் மருத்துவம், அடிப்படை வசதிகள் இன்றி அங்கு தமிழினம் அவதிப்படுகின்றது.இந்த நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்து என்ன முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கோ தி.மு.க அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்தன.அ.தி.முக. புறக்கணித்ததில் எவருக்கும் எந்த வியப்பும் இல்லை. ஆனால் ம.தி.மு.க செயலாளர் வைக்கோ அதை புறக்கணித்ததுதான் உலகத்தமிழதையே திடுக்கிடவைத்துள்ளது.அ.தி.முக. எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அவர்களோடு இணைந்து ம.தி.முக. புறக்கணித்தது என்பதுதான் வேதனையாக உள்ளது.
முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அரசியல்க் காரணங்களுக்காக பா.ம.க தி.முக. கூட்டணியில் இருந்து விலகியது. இருந்தும் ஈழத்தமிழர்களுக்கான விடயம் என்பதால் மருத்துவர் ராமதாஸ் அந்தக்கூட்டத்தைப் புறக்கணிக்காமல் கலந்துகொள்ளவில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
pathivu.com
*****








No comments:
Post a Comment