முகமாலையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிகப்பட்டுள்ளன. இதன்போது படையினர் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் நோக்கி படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.5 மணி நேர எதிர்த் தாக்குதலையடுத்து படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர்.
Pathivu.com
*****








No comments:
Post a Comment