
கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கைளை முன்னெடுக்கும் போது எதிர்வரும் நாட்கள் கடந்த இரண்டரை தசாப்த ஈழப்போரில் முக்கிய கட்டங்களை எதிர்பார்க்க முடியும் என போரியல் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொக்காவில் நகரில் இருந்து அக்கராயனைக் கைப்பற்றும் நடவடிக்கையின் போது படைத்தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது இரண்டு தரப்புக்கும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இக்பால் அத்தாஸ்' குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பூநகரிக்குப் படையினர் பிரவேசிப்பதைத் தடுக்கும் முகமாக நாச்சிக்குடாவின் கிழக்குப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள புலனாய்வுத் தரப்பு அறிக்கைகளின்படி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள போராளிகளை மீண்டும் தமது பிரதேசங்களுக்குச் செல்லுமாறு வன்னியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் கட்டளையிட்டுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Tamilwin.com
*****
for contact: jaalavan@gmail.com








No comments:
Post a Comment