ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் இன்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இன்று முதல் திரைத்துறையினர் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பாக இன்று மாலை மீண்டும் ஆலோசனைக்கூட்டம் கூட்டப்பட உள்ளதாகவும் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ள நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அண்மையில் அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் முன்முயற்சியில் தமிழ்த் திரையுலகம் தற்போது ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
puthinam.com
*****
for contact: jaalavan@gmail.com








No comments:
Post a Comment