
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது வான்குண்டுத் தாக்குதலை நடத்தி வரும் சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரித்தானியா நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரித்தானியா நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று திங்கட்கிழமை மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிரித்தானியா தமிழ் அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு மாத கைக்குழந்தை உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
பிரித்தானியா தமிழ் அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு மாத கைக்குழந்தை உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

- தமிழ் மக்கள் மீதான குண்டுவீச்சை நிறுத்துக!
- இலங்கைத் தமிழர் படுகொலை சிறிலங்காவே நிறுத்துக!
- பிரித்தானியாவே இப்போதாவது உதவு!
- 2 லட்சம் தமிழர்கள் இடம்பெயர்வு- 70 ஆயிரம் பலி- 2 ஆயிரம் கடத்தல்
இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்?
- பிரித்தானியாவே! சிறிலங்காவுக்கு எதிராக தடை விதி!!

என்பது உள்ளிட்ட முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.
பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொன்னல், இலங்கைத் தமிழர்களுக்கான பிரித்தானியா நாடாளுமன்ற குழுவின் தலைவர் வீரேந்திர சர்மா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழரின் துயரை வெளிப்படுத்தும் வகையில் எலும்புக்கூடுகளைப் போல் தமிழ் இளையோர் அமைப்பினர் உடைகளை அணிந்திருந்தனர்.
puthinam.com
*****
for contact: jaalavan@gmail.com








No comments:
Post a Comment