Monday, 13 October 2008

** குடாநாட்டில் நேற்றிரவு புலிகளின் விமானம் பறந்ததா அல்லது பலாலியில் ஒத்திகை ஏதாவது நடைபெற்றதா?

குடாநாட்டில் நேற்றிரவு 10.20 மணியளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மின்சாரம் நின்ற கையோடு கைத்தொலை பேசிகளும் செயலிழந்தன. விடுதலைப்புலிகளின் விமானங்கள் குடாநாட்டில் ஏதோ ஓர் இடத்தில் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.இராணுவப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு இதுபற்றிக் கேட்டபோது நேற்றி நள்ளிரவு வரை தமக்கு அப்படி ஒரு தகவல் கிடைக்கவில்லை எனத் தெரி வித்தார்.விமானத்தாக்குதலை எதிர்கொள்வதற்காக பலாலியில் ஒத்திகை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும்என்றும் அவர் மேலும் கூறினார்.

இதே வேளை நேற்று அதிகாலை ஒரு மணிக்குப் பின்னரே மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படலாம் என்று ஒரு தகவல் தெரிவித்தது. நள்ளிரவு 12 மணியளவில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. இச் செய்தி எழுதப்பட்ட வேளையிலும் அது தொடர்ந்தது.
uthayan.com
****

No comments: