மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு சிறிலங்கா படையினர் பாரிய எடுப்பில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று பிற்பகல் 6:00 மணிவரை தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.
இதில் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட்டுள்ளன.
puthinam.com
*****
for contact: jaalavan@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment