யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினருக்கான இரு வழங்கல் கப்பல்கள் மீதே கடற்கரும்புலிகளால் தாக்குதல் தொடுதுள்ளது என தமிழீழவிடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரிந்து நின்ற எம்.பி. நிமலவா என்ற கப்பல் மீதுகடற்கரும்புதில் தாக்குதலில் கப்பல்முற்றாகத் தீப்பிடித்து எரிந்து கடலினுள் மூழ்கியுள்ளன.இதேபோன்று எம்.பி. ருகுண என்ற வழங்கல் கப்பல் மீது நடத்தப்பட்டகரும்புலித் தாக்குதலில் கப்பல் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியதையடுத்து தரித்து நின்ற கப்பலை கப்பலை துறைமுகம் நோக்கி கடற்படையினரால் கட்டியிழுக்கப்பட்டுள்ளது.இன்றைய தாக்குதலை கடற்புலிகளின் மகளிர் அணியின் துணைத் தளபதி லெப்.கேணல் இலக்கியா மற்றும் கடற்புலிகளின் கொமாண்டோ அணியைச் சேர்ந்த லெப்.கேணல் குபேரன் ஆகிய இரு கரும்புலி மாவீரர்கள் வீரகாவியமாகியுள்ளனர்.
இத்தாக்குதலை கடற்கரும்புலி மகளிர் அணியின் துணைத் தளபதி லெப்.கேணல் இலக்கியா வழிநடத்தியதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.யாழ் குடாநாட்டில் உள்ள படையினருக்குத் தேவையான படைத்துறைத் தளபாடங்களைக் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு இக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
pathivu.com
*****








No comments:
Post a Comment