களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் தமிழீழ வான்படையினர் நடத்திய வான்தாக்குதலில் நாள் ஒன்றுக்கு 24 மில்லியன் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.அத்துடன் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தியில் 275 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.நாடுதளுவிய ரீதியில் 435 மெகா வாட்ஸ் மின்சார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான நேர இடைவெளியில் மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகின்றது.இதனை சீர்செய்வதற்கு 6 மாத காலம் தேவை என மின்வலுத்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தபோதும், 3 மாத காலத்தினுள் ஓரளவு மீளமைப்பு செய்ய முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
pathivu.om
*****








No comments:
Post a Comment