Friday, 3 October 2008

** யூனிசெஃப் அலுவலகம், பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் மீதும் வான்குண்டுத் தாக்குதல்


கிளிநொச்சி கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம் அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பனவும் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.
அத்துடன் ஜெயந்தி நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் ஒப்ரெக் கல்வி நிறுவனம் மற்றும் வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிறுவனம் மீதும் சிறிலங்கா வான்படை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் அப்பணிமனையின் கட்டடங்கள் சேதமாகியுள்ளன.






puthinam.com
*****
for contact: jaalavan@gmail.com

No comments: