Thursday, 6 November 2008

** ஜெயந்தன் படையணியின் அதிரடித் தாக்குதலில் 10 அதிரடிப் படையினர் பலி!

மட்டக்களப்பில் ஜெயந்தன் படையணியின் கொமாண்டோ அணியினர் நடத்திய அதிரடித் தாக்குதில் சிறீலங்கா அதிரடிப் படையினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு சிறீலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு 9.15 மணியளவில் பதுளை வீதியில் அமைந்துள்ள கோப்பாவெளியிலில் அமைந்துள்ள சிறீலங்கா அதிரடிப் படையினர் அவ்வளியிலேயே ரோந்து செல்லும் படையினர் மீது பதுங்கித் தாக்குவதற்காக தயாராக இருந்த வேளையில் படையினர் மீது ஜெயன்படையணி கொமாண்டோ அணியினர் முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

இதன்போதே படையினர் தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலில் ஜெயந்தன் படையணி கொமாண்டோக்கள் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி தமது தளம் திரும்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
pathivu.com
****

No comments: