
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று தென்னிந்திய (ஃபெப்சி) திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உணர்வுடன் பங்கேற்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள அருணாசலம் சாலையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்தி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சங்கத் தலைவர் ராம நாராயணன் தொடங்கி வைத்தார்.

தென்னிந்தி திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அமைப்பில் இடம்பெற்றுள்ள 24 சங்கத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். இதைவிட திரைப்படத்துறை சார்ந்த நடிகர்கள், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
pathivu.com
*****








No comments:
Post a Comment