நேற்று வெள்ளிக்கிழமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இந்த மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.
ஐந்து தடைவைகள் சிறீலங்கா இராணுவ பொருண்மிய இலக்குகள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான்புலிகளின் முதன்மை வானோடிகளுக்கு ''நீலப்புலி'' விருதை தேசியத் தலைவர் வழங்கி மதிப்பளித்தார்.
-
இதேபோன்று மூன்று தடவைகள் துணை வானோடிகளாகச் சென்று வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்திய வானோடிளுக்கு ''மறவர்'' விருதும் வழங்கப்பட்டுள்ளது.
___________''மறவர்'' விருது
_
வவுனியா கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலுக்கு ஒருங்கிணைந்து ஆட்டிலறி எறிகணைச் சூட்டாதரவை சிற்பாக வழங்கி சிறீலங்காப் படையினருக்கு அழிவுகளை ஏற்படுத்திய கேணல்.கிட்டு பீரங்கிப் படையில் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கும் சிறப்புப் பரிசில்களை தமிழீழத் தேசியத் தலைவர் வழங்கி மதிப்பளித்துள்ளார்.
_
_
இதில் பொறுப்பாளர்கள், போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
pathivu.com
*****

















No comments:
Post a Comment