Tuesday, 9 December 2008

** ஈழத்தமிழர்களுக்காக தமிழக அரவானிகளின் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம்!

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று திங்கட்கிழமை அரவாணிகள் உண்ணாவிரத ஒப்பாரி போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘'திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.



முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்'' என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழன உணர்வாளரும் நடிகருமான மன்சூர் அலிகான், தேனிசை; செல்லப்பா உட்பட பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து உரையாற்றியிருந்தனர்.
__________
Sankathi.com

No comments: