Wednesday, 10 December 2008

** இலங்கையில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை மீறல்கள்: கொண்டலீசா றைஸ் கவலை

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் கவலை தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பண்பாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் போரில் ஈடுபடும் தரப்பினரான சிறிலங்கா அரசாங்கம், துணை இராணுவக்குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகள் போன்றோர் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கேல் டீ ரார் சிறிலங்கா அரசுடன் இணைந்து மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முதன்மையான பங்கு வகித்திருந்தது. துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களை களைவதிலும் அமெரிக்கா அக்கறை காட்டியிருந்தது என்றார் அவர்.
__________
Puthinam.com

No comments: