Friday, 12 December 2008

** பயங்கரவாதத்தை தயவு தாட்சண்யமின்றி வேரோடு களைவதையே விரும்புகிறேன் - ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, மும்பாயில் நடைபெற்றதையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை எதுவித தயவு தாட்சண்யமின்றி வேரோடு களைய விரும்புவதாக தெரிவித்தார். "சிகாகோ ட்ரிப்யூன்' இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
"நாங்கள் மும்பாயில் கண்ட பயங்கரவாத தீவிரவாதத்தை தயவு தாட்சண்யமின்றி வேரறுப்போம் என்ற செய்தியை நான் அனுப்பிவைக்க விரும்புகிறேன்'' எனத் தெரிவித்த ஒபாமா, இஸ்லாமிய நாடொன்றின் தலை நகருக்குச் சென்று இது தொடர்பான பிரதான உரையொன்றை ஆற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

எனினும், எந்த நாட்டில் மேற்படி உரையை ஆற்ற அவர் திட்டமிட்டுள்ளார் என்பது தொடர்பில் விவரம் எதனையும் அவர் வெளியிடவில்லை. இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் அந்நாட்டுக்குத் தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது என ஒபாமா இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தந்திரோபாய பங்காளித்துவத்துக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
__________
Sankathi.com

No comments: